கவிதையும் காதலும்

கண்ணும் கண்ணும்
பேசிக்கொள்வது காதல்
கண்ணில் கண்
எழுதிக்கொள்வது கவிதை

இதயமும் இதயமும்
உரசிக்கொள்வது கவிதை
இதயமும் இதயமும்
ஒட்டிக்கொள்வது காதல்

மனசும் கொலுசும்
உரசிக்கொள்வது கவிதை
இதழும் இதழும்
ஒட்டிக்கொள்வது காதல்

குழலில் யாழ்
மீட்டுவது கவிதை
குழலில் விரல்கள்
பதிந்துக்கொள்வது காதல்

கவிதையை
நேசிப்பது காதல்
காதலை
வாசிப்பது கவிதை

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-May-19, 10:13 am)
பார்வை : 460

மேலே