வாழ்க்கை - தத்துவம்

எது எப்போது நிகழும் இவ்வுலகில்
யாரறிவார் இதுவே உலகின் நிலையாமை
கண்ணிமைக்கும் நேரத்தில் படைத்தான்
இதுவே 'பிக்-பேங்க்' , அதுபோல்
இமை மூடும் முன்னே அழித்திடுவான்
'அவனே' இந்நிலையில் நாளை என்பது
வரும் வரையில் நாளை என்பது தெரியாது
இதற்க் கிடையில் நம்மை ஆட்டிப் படைக்கும்
ஆணவம் , வன்மம், அசூயை !
நிலையில்லா உலகு, நிலையில்லா மனிதர்
அளவில்லா ஆசைகள் எண்ணங்கள்
அல்லவா கொள்ளவா வைத்துக்கொள்ளவா
எதை, யார் எப்படி எப்போது ?
உலகே மாயம், வாழ்வே மாயம்
இதைப் புரிந்துகொண்டால் பாதை
தெரியுமே தெளிவாய் நம்முன்னே ...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-May-19, 5:14 pm)
பார்வை : 464

மேலே