முதல் பார்வை

முதல் பார்வை💔

அவள் முதல் பார்வையிலேயே
முடங்கி விட்டேன்
கிறங்கடிக்கும் அவள் பார்வையால்
திணறிவிட்டேன்
திருடிவிட்டாள் என் இதயத்தை
இனி என் இதய ஓட்டம்
அவள் சொல் படியே ...

மாய கன்னி மயக்கிவிட்டாள் மனமெங்கும் நிறைந்த விட்டாள்.
உள்ளமெல்லாம் பூரிப்பு
கனவில் வந்தாள் அழகிய கள்ளி
கானகத்து அழகு சுந்தரி
இல்லாத இடை கொண்டு
நாட்டியமென நடந்து வந்தாள்
அம்பு விழிகளால் என்னை தொடுத்தாள் ஆச்சிரியத்துடன் அவள் அருகே நான்
நானத்தடன் தலை குனிந்தாள்
அவள் இடை வளைத்து
அவள் அழகிய முகத்தை
என் கரங்களில் ஏந்தி
பரவச நிலையில்
பவித்திரமான அந்த சூழ்நிலையில்
அவள் சிவந்த குவிந்த
இதழ்களில்
என் இதழ் கொண்டு
கவிதை எழுத...
சூரியனார் கதிர்கள்
சுள் என்று
என்
மீது வீச
ச்சே எல்லாம் கனவா...
என்னவளே விரைவில் கனவை நினைவாக்குவேன்.
- பாலு.

எழுதியவர் : பாலு (21-May-19, 6:35 pm)
சேர்த்தது : balu
Tanglish : muthal parvai
பார்வை : 172
மேலே