புன்னகை முத்துக்களானால்

முகம் தாமரையானால்
கவிதை ஆகலாம்
தமிழ் அமுத வரிகளாகலாம் !

கண்கள் கயல்களானால்
வானத்தின் நீலத்தில் சேரலாம்
வரிகளில் நீந்தி ஓடலாம் !

புன்னகை முத்துக்களானால்
மூழ்கத் தேவை இல்லை
வார்த்தைகளில் முத்துகுளிக்கலாம் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-May-19, 6:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே