என் கனவினில் நேற்று

... @@ என் கனவில் நேற்று @@...


பூ சொறியும் முகத்தோடு
என் அருகில் நீ!!!
என் கண் இரண்டும்
அசையாமல்
உன் முகத்தருகில் நான்!!!
கார்மேகம் கரைந்துருக
வானில் சில மாற்றங்கள்...
மழையினை கண்டு ரசித்தபடி
என் மார்போடு சாய்கிராய் நீ!!!
உலகை மறந்து
போகிறேன் நான்!!!
பூவின் மேணியில்
புன்னகைத்திடும் பனி
துளியாய் நீ!!!
உன் மடியில் மரணித்திடும்
மானிடனாய்‌ நான்!!!
தினம் தினம் இப்படியொரு
வலியினை ஏற்று கொண்டு
விழித்துக் எலுகையில்தான்
உணர்கிறேன்!!!
உலகினில் நான்தான் மிகவும் பாவபட்டவன் என்று!!!!
.... ரூபன் புவியன்.....

எழுதியவர் : ருபன் புவியன் (21-May-19, 8:50 pm)
Tanglish : en kanavinil netru
பார்வை : 619

மேலே