மதுரச கண்கள்

'சாம்பைன் ' மது போத்தல் மூடி
திறக்க சுனையின் நீர்போல் பீச்சியது
மது, புகையும் நுரையோடு, குடிபோர்க்கு
குடிக்க தூண்ட…..அதுபோல் பெண்ணே
மூடிய உன் காந்த விழிகள் திறந்து மலர
அதில் ததும்பிய காம ரசம் மதுவாய்
சுனையாய் பீச்சியது என் நெஞ்சைத் தொட
மதுரசம் ஏந்திய அக்கண்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-May-19, 10:04 pm)
பார்வை : 150
மேலே