உன்னை நீ தந்தாய்
என்னை நான் கேட்டேன்
உன்னை நீ தந்தாய்
எனையே கேட்பேன்
எதனை நீ தருவாய்
என்னை நான் பார்த்தேன்
உன் உருவம் கண்டேன்
உன்னை நான் பார்க்க
எதனில் பார்ப்பேன்
என்னை நான் தேட
உன்னையே கண்டேன்
உன்னை நான் தேட
எதனை கண்டடைவேன்
என் மொழி கேட்க
உன் மொழி கண்டேன்
உன் மொழி கேட்க
எதனை கேட்பேன்
என் நினைவுகளை தேட
உன் நினைவுகளை கண்டேன்
உன் நினைவுகளை
எதனில் தேடுவேன் நான்