பரிணாமம்

ஒரு நிமிடக்கதை-2⃣

பரிணாமம்
🔜🔛🔙🔝🔚

உனக்கு என்னப்பா நீயெல்லாம் படிக்காமயே பாஸ் ஆய்டுவ என்ற தனது நண்பர்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு அடிமையாகி போன பாண்டி வழக்கம் போல் இரவோடு இரவாக தனது அடுத்த நாள் தேர்வுக்கு படித்து முடித்து , வழக்கம் போல் புத்தகம் ஏதும் இன்றி பள்ளிக்கு கிளம்பினான்.

தனது ஹால்டிக்கெட்டை 30cm ஸ்கேலின் மேல் வைத்து அதை நன்றாக சுருட்டி இடது கையில் பிடித்துக்கொண்டான் (வலது கை பஸ்ல தொங்கி கொண்டு போக தேவை என்பதால்)

அம்மா ஸ்கூல்லுக்கு போய்ட்டு வரேன் மா.

சரி டா நல்ல பரிட்சை எழுது , அங்க டீவி பலகைல காசு இருக்கு எடுத்துக்கோ ,

இல்ல மா வேணாம் என்கிட்ட இருக்கு அத பாபா க்கு குடுத்துரு என்று கூறிக்கொண்டே , தனது முன்பக்க சட்டையை மட்டும் phant க்குள் சொருகி , சீவிய முடியை கலைத்து கொண்டே மினி பஸ்சை பிடிக்க விரைந்தான் .

இருபக்கமும் புழுதி பறக்க அந்த
வண்டி பதையில் கற்றை கிழித்து கொண்டு வந்து நின்றது மினிபஸ் ,

எப்பா பெருசு உள்ள போக மாட்டய , இன்னும் இலந்தாரினு நெனப்பா போயா உள்ள.....
என்று சத்தம் போட்ட கண்டக்டர் பாண்டியை பார்த்ததும் அமைதியானார் ....

வழக்கம்போல் கடைசி படிக்கட்டில் பயணம்...

பேருந்தில் கடைசி சீட்டில் இருந்த பெரியவர் ஏம்பா நியும் பரிட்சைக்கு தான் போரயா ,

ஆமா தாத்தா ...

என்னப்பா நிஜமாவா ...
எல்லாரும் புத்தகத்த
வைத்து படிஸுகிட்டு வராங்க நீ சும்மா வர அது கூட பரவாயில்லை ஒரு பேனா , பென்சில் ஒன்னும் இல்லை எப்படி பரிட்சை எழுதுவ

பரிட்சைக்கு படிக்காம , ஏதும் கொண்டுபோகாமா போரது
தான் தாத்தா கெத்து... என்றான்...

பெரியவர் மெதுவாக புன்னகைத்தார் .......

சில காலம் உருண்டு ஓடியது ....


சார் சார் ஒரு stapler கொடுங்க சார் ...
என்னப்பா நீ ஆபிஸ்கு புதுசா

ஆமாம் சார் ..

அதுலம் எங்ககிட்ட
இல்ல

அப்புறம் எங்க சார்

அந்த கார்ணர்ல ஒருத்தவர் கொஞ்சம் height ah clean shave பண்ணி , நீட்டா இன் பண்ணி இருப்பார் அவருகிட்ட கேளு

அவறுட்கிட்டதான் குண்டூசி ல இருந்து பேனா,பென்சில் , ஒயிட்ன்னர் வர எல்லாம் இருக்கும்அவருதான்நம்ம ஆபிஸ் ஸ்டேஷனரி incharge பா,

ஓ சரி சார் ....

சார் அவரு பேரு sir ...

அவரு பேரு பாண்டி .....................பாண்டியராஜன் .



மகிழன் @ அருண்

எழுதியவர் : மகிழன் @ அருண் (22-May-19, 5:24 pm)
சேர்த்தது : மகிழன் அருண்
Tanglish : parinamam
பார்வை : 105

மேலே