வேட்பாளர் லஞ்சேஸ்வரன்

(அதிகமாக லஞ்சம் கிடைக்கும் துறையில் பணியாற்றி பணி
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து ஒரு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிக்கும்போது):
..........
வாக்காளப் பெருமக்களே, எனக்கு வாக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி. மகிழ்ச்சி. நன்றி! நன்றி ! நன்றி!
நான் அரசுப் பணியில் லஞ்சம் அதிகம் கிடைக்கும் துறையில் மனநிறைவோடு சேவை செய்து பணி ஓய்வு பெற்றவன். லஞ்சம் கொடுத்தவர்களுக்கு உடனே அவர்களுக்கான தேவையை உடனே நிறைவேற்றித் தரும் உத்தமன் என்று பெயர் பெற்றவன்.
எனவே வாக்கு ஒன்றுக்கு ரூ 100/- வசூல் செய்து முன்தொகையாக வழங்கினால் நான் வெற்றி பெற்றதும் உங்கள் பகுதி குடிநீர் பிரச்சனையை ஒரே வாரத்தில் தீர்த்து வைப்பேன். நீங்கள் என் அலுவலகத்தில் ரூ500/-கொடுத்துவிட்டு என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
என் பெயர் லிங்கேஸ்வரன். லஞ்சம் வாங்குவதில் என் திறமையைக் கண்டு வியந்த மேலதிகாரிகள் எனக்கு வைத்த பட்டப்பெயர் தான் லஞ்சேஸ்வரன்.
@@@@
(உடனே கட்சித் தொண்டர்கள்):
லஞ்சப் பணியில் பேரும் புகழும் பெற்ற அண்ணன் லஞ்சேஸ்வரன் என்ற லிங்கேஸ்வரன் வாழ்க. அண்ணன் லிங்கேஸ்வரனுக்கு சிந்தாபாத்து. பாத்துப் பாத்து சிந்தாபாத்து.

எழுதியவர் : மலர் (23-May-19, 10:51 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 192

மேலே