ரம்ஜான் வாழ்த்து
ரம்ஜான்
இது
முசல்மான்கள்
எனும் அசல்மான்களின் திருவிழா
இது
நோன்புப் பண்டிகை
அல்ல அன்புப் பண்டிகை
இவர்கள்
குறைமதியை வணங்கியே
வட்டி தவறு எனும்
நிறை மதியைப்
பெற்றவர்கள்
ஜான்
விரல்களின் அளவு
ரம்ஜான்
விரதத்தின் அளவு
ஏழைகளின்
வயிற்றுப் பசியை
அறிந்து பார்க்கவே
இப்பண்டிகை
இதற்கு ஈடு
எப்பண்டிகை
நாம் உண்டி
கொடுத்து இல்லாதோர்க்குக்
கொடுப்போம் கை
ரம்ஜானில்
பூக்கின்ற தேன்பூ
அது நோன்பு
ரம்ஜான் கிறிஸ்துமஸ்
தீபாவளி அனைத்தும்
ஒரே நாளில் வரவேண்டும்
அனைவரின் இன்பதுன்பங்களும்
ஒரே இறைவனின்
தோளில் விழவேண்டும்
கோயிலில் ஏசுவும்
மசூதியில் சிவனும்
தேவாலயத்தில் நபியும்
வாழவேண்டும்
வேற்றுமைகள் வாழவேண்டும்
எதிர்காலத்தில்
எதிர்ப்பதங்களாய்
இருக்கும் மும்மதங்கள்
இணைந்து சம்மதங்கள்
ஆகவேண்டும்
அனைவருக்கும்
ரம்ஜான் வாழ்த்துக்கள்