வீழ்வேன் என்று நினைத்தாயோ

வீழ்வேன் என்று நினைத்தாயோ
==============================

எங்கப்பா இறந்ததும், அவர் சொன்னதுபோலவே, பல இடத்திலிருந்து எங்களுக்கு வரவேண்டிய பணம் எதையுமே
யாரிடமும் கேட்காமல் விட்டுட்டேன்..
அவர்கள் என்னைக் கடந்துபோகும் போது கூட
குற்ற உணர்ச்சி தோன்றாமல் கடவுள் அவர்களைக் காத்துக் கொள்ளட்டும்.
ஆனால், நான் என் சந்திதியை ஓர்த்து
யாருக்கு எது சேரணுமோ எல்லாம்
தீர்த்து விட்டேன். வங்கிக் கடன் பாக்கி இருந்தது. ஒரு நாள் என்னை அழைத்தார்கள்
4 மணி நேர பேச்சு வார்த்தையின் பிறகு,
வீட்டிற்கு வந்தேன். நாம எப்போ வேணும்னாலும் நம் சொத்து, வீடு எல்லாவற்றையும் விட்டு ஒரு வாடகை
வீட்டிற்குப் போகும் நிலை வரும், அதனால்
பயமோ தயக்கமோ வேண்டாம்.
என் தந்தை என்னை நன்றாகப் படிக்கவைத்திருக்கிறார். ஒரு தந்தை ஒரு மகனுக்கான கடமையை சரிவர செய்திருக்கிறார்.. அவருடைய இன்மை
என்னை இத்தனை அசைத்துப் பார்க்கும் என
நினைத்துப் பார்க்கவில்லை. இருந்தாலும்
அச்சப்படாமல் இருக்கிறேன். இழக்கப் போகிறதை மீண்டும் மீட்டெடுத்துவிடுவேன்.
என் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று என் மனைவியிடம் சொன்னேன். அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள் . எல்லாம்
சரியாகும் நாங்கள் எப்போதும் உங்களோடு இருக்கிறோம் என்றுச்சொன்னாள். இன்னொருமுறை வங்கி கோர்ட் மூலமாக ஜப்திக்கு சம்மன் அனுப்பியது. என் பெரியம்மா மற்றும் என்‌ மனைவியின் தாயார் இருவரும் ஆழ்ந்த ப்ரார்த்தனையில் இருந்தார்கள் . என் சொந்தங்களெல்லாம் .. நான் வீழ்வதற்கான நேரத்தை எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்..
சில மனிதர்களுக்கான நன்றியை
அவர்கள் வாழ்ந்திருக்கும்போதே அதை நிறைவேற்றிட வேண்டும்.. நானும்
என் மனைவியும் குழந்தைகளை மனதில் நிறுத்திவிட்டு .. பேங் போயிருந்தோம்
என் தந்தையின் நல்ல நண்பர் ஒருவரும்
வந்திருந்தார் .. ..மூவரும்
வங்கியின் Administrative Office சென்று
உயர் administrative officer ஐ சந்தித்தோம்.. வங்கி லாயர் கொஞ்ச நேரத்தில் வந்தார் ..
ஸோ என்ன முடிவு பண்ணிருக்கிங்க என்றுக் கேட்டார் ..

I will not breach the notice which you have been sent us .. It is appreciable that, am herewith requesting little stint for the final closure. என்று ரெக்குவெஸ்ட் செய்தேன்.

எப்படி க்ளோஸ் பண்ணப் போறீங்க ன்னு கேட்டார்.. அப்ராட் போறேங்க சார் .. நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சிருக்கு ன்னு
சொன்னதும் ..

Its a blatant violation, u can't admit to move away. My jesture could concludes the party thinking to evade from the situation. ன்னு சொன்னாரு.. அவமானத்தை உரமாக மாற்றிக்கொண்டு
கண்டிப்பா கட்டிடறேன் சார் ன்னு சொன்னேன்.
அப்போது கூட வந்த நண்பர் (நன்றி சொல்ல‌க் கடமைப் பட்டிருக்கிறேன்) அவர் ஃபேமிலி இருக்காங்க சார் .. ன்னு சொன்னதும் ..

என்‌மனைவி .. He has issued already registration attorney to me..am the true nominate for all our owned property ன்னு சொன்னா ..

அவர் கட்டலேன்ன உங்களை house arrest பண்ணிடுவாங்க ம்மா ன்னு சொன்னதும்

பரவால்லைங்க சார் .. 50℅ லைஃப் பார்ட்னர்
ரெடி சார் என்றாள்.

பேங் நான் வெளிநாடு போக ஸ்டே இல்லை என சம்மதித்தது ..

வெளியில் வந்ததும் .. என் மனைவியிடம் கேட்டேன் .. என் மேல அவ்ளோ நம்பிக்கையா ன்னு கேட்டேன் .. அவள் என் உள்ளங் கைகளை மீண்டும் இறுக அணைத்துவிட்டு
சிறு புன்னகை புரிந்தாள் .. அதில், அவள் பாதுகாப்பை .. குழந்தைகளின் பாதுகாப்பை
இதமாக்கி வைத்திருக்கிறாள்.. என்னை நம்புகிறாள் .. என்னை இழந்தாவது அவர்களை வாழ வைக்கும் பொறுப்பை
எனக்கு உணர்த்துகிறாள்..
அன்னைக்கு தீர்மானித்தது ..
நவனீதாண்டே நாக்கு ப்ராணம்" என்று..

"""""உன் மனைவி குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம்
பயப்பட வேண்டாம்.. நீ சென்றுவா என்றுச் சொல்லும் உறவுகள் கிடைப்பது வரம்..
என் மனைவியின் அம்மாவிற்கு, எப்போதுமே
தைரியமூட்டும் என் அக்காவிற்கு, பெறும் கடமைப் பட்டிருக்கிறேன்..
வாழும் காலங்களிலேயே உரியவர்மேல்
உள்ள அன்பை பாக்கி ஏதும் வைக்காமல்..
அன்னன்னைக்கு சமயம் கிடைக்கிற போதெல்லாம்‌ பகிர்ந்து வாழ்ந்து தீர்த்துவிடவேண்டும்.. பின்னால்
வாழ்ந்துகொள்ளலாம் என தேக்கிவைக்கும்
அன்பை கொடுக்க எண்ணும் நாட்களில்
இவர்களில் சிலர் நம்மோடு இல்லாமல்
போய்விடலாம்தானே """""

இதோ பெரிய சுமைகளை எல்லாம் முடித்து விட்டேன்.. எதையும் விற்கவில்லை.. இன்னும் ஒருவருடக் காலம் உள்ளது .. எல்லாம் சரியாகிவிடும்..

வழக்கம் போல இன்று படுக்கையிலிருந்து எழுந்ததும் அவளுக்கு இணைப்பூட்டினேன்.
நாங்கள் நன்றாக இருந்தபோது எங்களுடன்
இணைப்பில் இருந்தவர்கள் கடந்த சில வருடமாக .. எங்களுடன் நடப்பில் இல்லை..
இம்முறை அவர்கள் ஹிமாச்சல் குளுமனாலி
சென்று வந்திருப்பதை வாட்சப் ஸ்டேட்டஸில் வைத்திருப்பதைப் பார்த்தவளுக்கு கொஞ்சம் மன வேதனை.. எத்தனையோ முறை ஆல் இண்டியா அண்ட் ஃபாரீன் டூரில் எங்களோடு இணைந்தவர்கள். இம்முறை அட்லீஸ்ட் சொல்லக் கூட இல்லை ன்னு அவள் படும் நொம்பரம் என்னை மிகையாக வாட்டியது

கடந்த இரண்டு, இரண்டரை வருஷமா, என் வியாபார சூழ்நிலையால (Doing some enhancement expedition) என் குடும்பத்தை
வெகேஷன் க்கு கொண்டு போக முடியவில்லை .. அஃபிஷியல் வெகேஷன் மட்டும் தான் கொண்டுப்போக முடிந்தது

தீரா யோசனையுடன் .. அலுவலகம் வந்து இருந்துவிட்டு .. அடுத்த சம்மர் வெகேஷனுக்கு
எத்தனை இலட்சங்கள் போனாலும் அவள்
சந்தோஷத்திற்கு ஈடில்லை என்றுவிட்டு .. 14 இரவுகள் 15 பகல்கள் என make my trips இல்
இடாலி டூர் புக் செய்துவிட்டு.. அமைதி யாக
அவள் அலைப்பேசிக்கு மீண்டும் இணைப்பூட்டினேன் .. எடுத்ததும் மென்மையாய் சிரித்தாள்.. என்ன பண்ணிக்கிட்டிருக்க னு கேட்டேன் ..
பீரோ ல இருக்கிற துணி எல்லாம் எடுத்துப் போட்டு மடிச்சி realignment பன்றேங்க னு சொன்னா .. சரி அடுத்த வெகேஷன் க்கு
இடாலி போறோம் .. புக் செய்திட்டேன் னு சொன்னேன் .. சந்தோஷப்பட்டாள் .. அதே மென்மையான புன்னகை .. சரிங்க உங்களுக்கு வேலை நிறைய இருக்கும், முடிச்சிட்டு கூப்டுங்க ன்னு சொல்லிட்டு வச்சிட்டா ..

"வீழ்வேன் என்று நினைத்தாயோ"

பூக்காரன்

எழுதியவர் : அனுசரன் (27-May-19, 10:36 am)
பார்வை : 176

சிறந்த கட்டுரைகள்

மேலே