தூக்கத்தில் காதல் பயணம்
காகிதக் கப்பலில் அவளும் நானும்
அமிழ்ந்து விடுவோம் என்றது பயம்
ஆனாலும் துணிவிருந்தால் பயணம்
பயணத்தில் என் கை கோர்த்தாள்அவள்
கெட்டியாய் பிடித்தேன் அவளை
இப்படியே நாம் இருவரும் நினைத்தால்
ஆகாயத்திலும் பறக்க முடியும் என்றாள் அவள் ,
நம்பினேன் அவளை நானும்
இது ஒரு கற்பனைக் காதல் என்றால்
நம்பமுடியவில்லை எம்மால் .
ஆனாலும் எமது காகிதக் கப்பலில்
விடிய விடிய பயணம் பண்ணினோம்
தூங்க முடியவில்லை அச்சம் அதிகரித்தது
இடி பிடிப்பதுபோல் எமது காதுகளில் ஒலித்தது
அம்மாவின் குரல்,,, டேய்/ கதவைத் திறவடா
விடிந்து மணி ஒன்பதாகிறது வெய்யில் பார்
திடுக்குற்றுற்றேன் அப்போதுதான்
அவள் கரம் என்னை விட்டது ,ஏக்கத்துடன் விழித்தேன்
தூக்கத்தில் இது ஒரு சுவார்சியம்.