நண்பன், நட்பு
உன் வெற்றியில்
உன் தோளோடு தோள் தந்த
தோழனின் உண்மையான
நட்பின் பாங்கைக் கண்டாய்
இன்று நீ தோல்வியில் ,
தொய்ந்துபோய் இடிந்து
கன்னத்தில் கை வைத்து
வானத்தை நோக்கி வெறிச்சோன்னு பார்க்க
உன் தோள் மீது அதே உன் தோழனின் கைகள்
'தோல்வியே வெற்றிக்கு வீதி , கன்னத்தில்
கை வைக்காதே நண்பா எழுந்து
நிமிர்ந்து நில் உனக்கு துணையாய்
நான் இருக்க கலங்காதே நீ
வா வெற்றி காண்போம் வாழ்விலே'
என்றானே ……… அவன்தான்
உண்மை தோழன் ….
வெற்றி, தோல்வி இரண்டிலும்
உன்னோடு நிற்பவன் , அவன்
நட்பு அவனை விட சிறந்தது
எப்படி கடவுளைவிட அவன்
நாமமே சிறந்தது என்பதுபோல்.