இது சதுரங்க ஆட்டம்

இது சதுரங்க ஆட்டம்,

எதிராளியின்
காய்நகர்த்தலுக்கொப்ப
நகர்த்தும் காய்
வெல்வதற்க்கே
ஆனாலும்
வெட்டப்படலாம்,

இருந்தும்
நகர்த்தல் நலம்,
பதிலளிக்காத போதும்
பேசிக்கொண்டிருக்கும்
என்னைப்போல்,

படிக்காத போதும்
எழுதிக்கொண்டிருக்கும்
என்னைப்போல்
காய்கள்
நகர்த்தலே நலம்,

காத்துக்கொள்ளும்
தற்காப்பு
யுக்தி இது,
நினைவு மங்கிய
நாளில் என் காய்கள்
நகர்த்திய இடங்களின்
தடயங்கள் நோக்கி
என்னை நகர்த்தி
கொண்டிருக்கும்.

நீங்கள் செய்ததே
உங்களை அடையும்
என்பதற்க்கொப்ப...??

எழுதியவர் : சபீரம் சபீரா (31-May-19, 8:19 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 89

மேலே