போதிய ஆதாரமில்லை,

போதிய ஆதாரமில்லை,

ஆசிபா தன்னைத்தானே
வன்புணர்ந்துக்கொண்டாள்,
சாட்சியாக இருந்த
கருவறை சாமிகள்
சாட்சிக்கு வரப்போவதில்லை,

கண்ட சாட்சி இல்லையாம்
கண்டவனெல்லாம்
காமுற்று குதறியபோது
கதறிய ஆசிபா
தன்னைத்தானே
வன்புணர்ந்துக்கொண்டாள்,

இவர்களின்
குறிக்கோல்கள்
சட்டத்திலும்
ஒரு ஓட்டையை போட்டிருக்கிறது,
ஆசிபா தன்னைத்தானே
வன்புணர்ந்துக்கொண்டாள்,

ஆதரங்களோடு
அதரங்களையும்
பாதுகாத்து
கொள்ளுங்கள்
ஆசிபாக்களே

நீதியின் கண்களும்
காமுறுகிறது.

எழுதியவர் : சபீரம் சபீரா (31-May-19, 7:11 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 119

மேலே