குறையுமா

பருந்தை எதிர்க்கப்
பறந்து காக்கும் தாய்க்கோழிபோல்
பிள்ளைகளைப்
பாதுகாத்து ஆளாக்கிய தாய்,
வருந்திக் காத்திருக்கிறாள்
எமனின்
வரவுக்காக..

படித்த பிள்ளைகளைப் பெற்ற
பல தாய்களின்
நிலை இதுதான்..

அறிவுக் கண்கள் திறக்க
அவர்கள் கற்ற கல்வியால்
இன்று அதிகமாய்த் திறக்கின்றன
முதியோர் இல்லங்கள்..

மாறுமா இந்த அவல நிலை,
ஏங்கிக் காத்திருக்கும்
இத்தகு அன்னையரின்
எண்ணிக்கை குறையுமா-
காத்திருப்போம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-May-19, 6:46 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 87

மேலே