மனதுக்குள் அழுகிறேன் நானும் 555

என்னுயிரே...


உனக்காக யாரும்

இல்லையென வருந்தாதே...


உனக்காக நான் எப்போதும்

இருப்பேன் என்றாய்...


உனக்காக

நானும் வாழ்கிறேன்...


ஒருநாள் அழுதுவிட்டு நீ

காற்றோடு கலந்துவிட்டாய்...


நான் தினம் தினம்
அழுகிறேன்
உன் நினைவில்...


உன் நினைவுகள்

பெருக்கெடுக்கும் போதெல்லாம்...


வாய்விட்டு

கதறிஅழ நினைக்கிறேன்...
முடியவில்லை
பிறர் பார்த்துவிட்டால்...


மனதுக்குள் அழுகிறேன்
நானும்
யாருக்கும் தெரியாமலே...


காற்றில் கலந்த உன் சுவாச

காற்று இருக்கும்வரை...


நானும் மண்ணில்

இருப்பேன் உன் நினைவில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Jun-19, 8:12 pm)
பார்வை : 1305

மேலே