தமிழ் மொழிப்பயிற்சி
இன்றைய சென்னை
ஒளிபொங்கும் விழிகள் எங்கே?
வீரங்கொள் நெஞ்சம் எங்கே?
அளித்தோங்கும் கரங்கள் எங்கே?
அன்புறு மொழிகள் எங்கே?
விளித்துண்ணும் இல்லம் எங்கே?
விருந்தோம்பும் பண்பும் எங்கே?
சலித்துப்போய்ச் சென்னை நோக்கின்
செந்தமிழ்ப் பேச்செங்கே எங்கே?
தமிழ் மொழிப்பயிற்சி
சாலைக்கு street என்றார்
சமையலுக்கு cooking என்றார்
ஆலைக்கும் factory என்றே
ஆங்கில மொழியில் சொன்னார்
சோலைக்குள் சென்றால் வீசும்
செந்தமிழ்த் தென்றல் என்று
மாலையில் அங்கு சென்றேன்
Park closed என்று பணியாள் சொன்னார்.