தமிழ் வளர்ச்சி
தமிழ்வளர வேண்டின்நம் தரமுயர வேண்டும்
தரமிக்க அறிவியலின் தடமறிய வேண்டும்
அமிழ்தினிய சொல்வேண்டின் ஆரோக்கிய மானக்
கண்டுரைக்கும் சொல்லாட்சிக் களஞ்சியங்கள் வேண்டும்
கமழும் மணம்வேண்டின் கற்பனை யில்லாமல்
கருத்துரைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வேண்டும்
சிமிழ்போலே செந்தமிழைச் சிறையினில் வைக்காமல்
சிறகடிக்கும் சிந்தையொடு சீரமைக்க வேண்டும்.