இயற்கை காட்சி

புன்னகைத் ததும்பும் பொலிவுடனே
பூத்திடும் முல்லைக் கொடியினிலே
கன்னிகை இயற்கை வருகின்றாள்
காற்றிடைக் காட்சித் தருகின்றாள்
என்னுளம் இழந்தேன் அவ்வழியில்
எழிலினைப் பருகி இருவிழியில்
பின்னரும் தூய்மை துறப்பேனோ
பொங்கரின் கூழல் மறப்பேனோ

எழுதியவர் : இரா. நந்தகோபால் (2-Jun-19, 11:28 pm)
சேர்த்தது : R Nandhagopal
பார்வை : 1063

மேலே