வேண்டும்

அன்னை மடியில்
உறக்கம் வேண்டும்

ஆலங்கட்டி
மழை வேண்டும்

இரவில்
சூரியன் வேண்டும்

ஈழத்தில்
அமைதி வேண்டும்

உள்ளங்களில்
அன்பு வேண்டும்

ஊசி அளவு
உரசல் வேண்டும்

எட்டு திசையும்
ஆழ வேண்டும்

ஏழு கடலும்
தாண்ட வேண்டும்

ஐபூதங்களையும்
அடக்க வேண்டும்

ஒன்றிணைந்த
மக்கள் வேண்டும்

ஓடும் நதிகள்
வற்றாமல் வேண்டும்

ஔவையின்
தமிழ் வேண்டும்

தமிழன்
தமிழில் பேச வேண்டும்


எழுதியவர் : அரவிந்த் (30-Jul-10, 6:28 pm)
சேர்த்தது : Aravinth
Tanglish : vENtum
பார்வை : 419

மேலே