கவிஞனின் காத்திருப்பு
சாயங்கால சாரல் காத்து!
நீ வரும் சாலை பாத்து!
என் நெஞ்சில் காதல் பூத்து!
உனக்காக காத்திருந்தேன்!
கால்கடுக்க காத்திருந்தேன்!
காத்திருந்தே கரைந்துவிட்டேன்!
கண்டும் காணமலும் நீ சென்றாய்!
காற்றோடு கலந்துவிட்டேன்!
துடிக்க மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
தவிக்கவும் கற்றுக் கொடுத்தது
உன் காதல்...!
தவித்த என் இதயத்திற்கு
தாகம் தீர்ந்தது..
என்னை கடந்து
சற்றே நடந்து சென்று..
நீ திரும்பி பார்த்த
ஓரவிழி பார்வையில் உணர்ந்தேனடி
உன்னில் என் காதலை!!!
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤