அவள் கண்களின் அழகு
காதளவு நீண்ட கண்ணியாதலால் கண்ணே
கண்ணின் அழகால் உன்னை ஏரார்ந்த கண்ணியென்பேன்
கன்னியே அந்த நீண்ட கண்கள் கயல்போல்
காண்பதால் நீ கயல்விழியானாய்,இன்னும்
என்னைப் பார்த்தும் பாராததுபோல் நீ ஒதுங்க
உன் கண்கள் சொல்லும் மருட்சியில் பெண்ணே
நீ மான்விழியாளானாய் ,மலரின் குளுமை
உன் கண்களில் கண்டேனே நீ மலர்விழியால் ஆனாய்
சந்திரனின் தன்னொளி வீசும் பார்வையால்
உன் கண்கள் சந்திராட்சி ஆக்குதடி உன்னை
மை இட்ட உன் கண்களில் பூட்டிய மாயம்தான்
யாதோ நானறியேன் கண்ணே அதனால்
நீ காந்தவிழி கண்ணினாய் ஆவாய்யடி
பேசும் கண் உனது அதனால் கணிமொழி நீ
கண்ணே கண்ணே என் கண்ணம்மா.