அழகுக்கே ஒரு ஆடம்பரமானவளே

காற்றே உன்னைக் காணத்துடிக்குதடி
காதலால் அதற்கு உருவம் முளைக்குதடி

தோதாய் ஒரு நாளும் குறிக்குதடி - தன்
தோழனோடு வந்து பேச முயலுதடி

அழகுக்கே ஒரு ஆடம்பரமானவளே - உன்
அங்கங்கள் பேரெழிலாய் உள்ளதடி

பொன்னின் நிறம் உன்னில் மங்குதடி
பொன்னையின் குளிர்ச்சி வார்த்தையில் வழியுதடி

அழகாய் நீயும் அசைந்து நடக்கையிலே
அணு உலை என் இதயத்தில் கொதிக்கிதடி

பொன்னே மணியே பூக்களின் குவியலே
கண்ணாய் காப்பேன் கைப்பற்ற வருவாயோ?
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Jun-19, 6:34 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 316

மேலே