நட்பு

வகை தொகைத் தெரியாது
கந்து வட்டிக் காரனிடம்
கடன்மேல் கடன் வாங்கி
குடும்பமே கடனில் மூழ்கிவிடும்
நிலை வந்தது அவனுக்கு .
மூழகும் கப்பல் போன்ற நிலை அது ,
அப்போதுதான் நினைவுக்கு வந்தான்
அவனுக்கு அவன் உயிர்த்தோழன்
அவனை கைப்பேசியில் அழைத்து
'நண்பா என்னைக் காப்பாத்து, 'என்று
ஒரே ஒருமுறை தான் கூவி அழைத்தான்அவன்,
அன்று பாஞ்சாலி குரல் கேட்டு அவள்
துயர்த் தீர்த்த கண்ணபிரான் போல்
அவன் நண்பன், ஓடோடி வந்தான்
ஒரு குரல் கேட்டே , நண்பன் துயரைத்
தீர்த்துவைத்தான் மூழ்க இருந்த
அவன் குடும்ப கௌரவத்தையும் நிலை
நிறுத்தினான் உயிர் நண்பன்
'என்றும் முழகா கப்பல் நட்பு ' என்ற
பொய்யாமொழிக்கேற்ப .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Jun-19, 2:16 pm)
Tanglish : natpu
பார்வை : 4422

மேலே