காதல்

ஓவியன் நான்
கருவூலம் அவள்
அழகின் அழகாய் கருவூலம்
அதை அப்படியே தீட்டிட
என் கைகளுக்கு திறமைத்தாராய்
இறைவா என்று வேண்டினேன்

சிற்பி நான்
பதுமை என்முன்னே அவள்
அழகே வடிவெடுத்த பதுமை
இந்த கல்லில் அதை வடிக்க
என் கைகளுக்கு திறமைத் தாராய்
இறைவா குறைவில்லா சிற்பமாய்
அவள் அழகை சமைக்க

கவிஞன் நான்
கருவூலம் அவள் என் காதலி
அவள் அழகுக்கு கவிதை வரிகள்
தேடுகின்றேன் இறைவா
குறையேதுமில்லா கவிதைதந்திட
அழகு கவிதை அழகு காதலிக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Jun-19, 7:45 am)
Tanglish : kaadhal
பார்வை : 280

மேலே