நாணலா அவள்

நிலவொன்று நீர்ச்சுனையில்
படைத்தவன் எவனோ
பால்வெளி வீதியில்
பளிங்கை பதித்தானோ

தடாகத் தாமரை
தரையில் மிதந்திட
பன்னீர் பந்தல்
பாங்காய் அமைத்திட

அவள் ஓரடியும்
ஓய்யார ஓவியமாம்
சிறு நடையும்
சிறு நடனமாம்

தனித்துதான் வந்தாளோ
தரணியில் பிறந்தாளோ
காதல் கணைகளை
கண்களில் வீசியபடி

வெண்மதி அவளென
வெள்ளைமனமும் நம்பின
வெளிச்சம் பரவாமல்
வெண்சங்காய் அவள்

பூ பூக்கும்
ஓசையில் மென்னுடல் வாடிட
ஓராயிரம் கவிதைகளை தூவியபடி
வெண்மதி அவள்
வெண் மேகமாய்
நதியோர நதிக்கரையில்
நாணலாக...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (7-Jun-19, 7:53 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 299

மேலே