திருக்குற்றாலத் திருத்தலத்தின் எழில் கொஞ்சும் பேரழகை திரிகூட ராசப்ப கவிராயர் வர்ணிக்கிறார்
வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்…
மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கொஞ்சும்…
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்…
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விழைப்பார்…
தேனருவி திரையெழும்பி வானின் வழியொழுகும்…
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்…
கூனலிளம் பிறை முடிந்த வேணியலங்காரர்…
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே…