ஓர் மழைநாளில் நான்

யாருமற்ற என் பொழுதுகளில் மழைத்துளிகளின் ஓசையுடன் ..,
இறுக்கமான மனநிலையில் கண்ணீர் தேங்கியபடி வெறித்துப் பார்த்த விரக்தியில் அசைவற்ற என் கருவிழிகள் ..!
கண்ணீர் சிந்த மறந்த நிலையா அன்றி மரத்த நிலையா என்பதே தோழியின் குறும்புத் தொடுதல் உணர்த்துகையில்.., சட்டென நினைவுகள் திரும்புகிறது..!
கண்ணாம்பூச்சி ஆட்டம் போல் என் வாழ்க்கை கேள்விகளின் நிதர்சனத்தில் பயணிக்க.., உண்மை நிலைகள் இருளுக்குள் ஒளிந்ததா அன்றி மறைந்ததா என்பது ஐயமாகவே தொலைந்திட.., இருள் விடுக்கும் ஒளி வினவி நிற்கிறேன் கார்மேக கூட்டத்தின் நடுவில்..!
பழைய நினைவுகள் தூறலுடன் துளியாய் சில்லிட.., என் கண்ணீரில் உன் பிம்பத்தை அழிக்க முயல்கிறேன்.., உன் பிம்பம் என் இமைகளில்..! அனைத்தையும் அழித்து போக எண்ணுகிறேன் மீண்டும் என் தனிமை கனவுக்குள்.., நீ நிழலென்று உணர்ந்தும்...! என் இருப்பிடம் சேர்ந்து விட்டேன்.., கனவுகளை கொலை செய்து விடுவதாய் எண்ணி, என்னை நானே ஏமாற்றிக் கொண்டு..!

எழுதியவர் : SARANYA D (14-Jun-19, 5:25 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : en thanimaikl
பார்வை : 155

மேலே