உடன்பிறப்பாய்

தொப்பிள் கொடியுற வில்லை யெனிலும்
தொட்டுப் பிடித்தே வந்த வுறவு,
அப்பன் ஆத்தாள் இல்லாத போதிலே
அன்புடை உடன்பிறப் பான உறவு,
செப்படி வித்தைகள் காட்டியே அவளுடன்
சேர்ந்தே ஆடிடும் ஆட்டுக் குட்டி,
இப்படி உறவுகள் இனிதாய் வந்திடும்
இனிய கிராம வாழ்வினில் தானே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Jun-19, 5:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே