சித்தம் எங்கே
ஆசை தவிர்த்தவன் சித்தன் என்கிறார்,
பாசம் விதைக்க ஆசை முளைக்கிறதே!
நேசமுடன் வாழ
பாசமும் தேவையாய் இருக்கிறதே!
பாசங்களிடம் உயர்வு காட்ட,
பணம் தேடச் சொல்லுதே!
பணம் நாடி பாழும் மனசு
பணம் பணமென்றே அலைகிறதே!
மனசு படுத்தும் பாடே,
அத்தனைக்கும் காரணமாயிருக்க,
மனசை கட்டுப்படுத்தி விடு,
கடவுள் உன் அருகில் வருவார்.