தந்தையர் தின வாழ்த்து

அன்புள்ள தந்தையருக்கு
வாழ்வதிலும் மிகப் பெரிது தியாகம் ,
தன்னலம் பேணாது ஓடியோடி உழைத்து
உண்ணும் நேரமும் உறங்கும் நேரமும்
மட்டுமே தனதாக்கி
மிஞ்சுகின்ற பொழுதெல்லாம்
தன் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று
பணத்தையும் பாசத்தையும் உழைப்பையும்
கொட்டிக் கொடுத்து வளர்க்கும்
அன்பும் அக்கறையும் உள்ள தந்தையரே
உங்களுக்காக இந்நாளை
மிக சிறந்த நாளாக தெரிந்து
தந்தையின் மடியில், அவன் கரத்தில் பிள்ளைகள்
என்கின்ற விழிப்புணர்வு கொள்ள
தந்தையர் தினமாக உலகத்தில் சிறந்த
உள்ளமெல்லாம் தொட்டு விட்ட
இத்தினம் மிக மிக உயரிய தினம் .
என்றென்றும் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
தந்தை இன்றிய பிள்ளையும் இல்லை,
தலைவன் இன்றிய நாடும் இல்லை
தலைவனின் நிழலில் நாடும், தந்தையின் அன்பில் வீடும்.
இதுவே இறைவனின் நீதி , உலகம் இதற்குள்ளே
தந்தை என்ற சொல்லுக்கு மிஞ்சியது ஏதுமில்லை

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Jun-19, 11:12 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 114

மேலே