என் தந்தை

அம்மாவின் அன்பிலும் அரவணைப்பிலும்
வளர்ந்தேன் நான் , 'இவர்தான் உன் தந்தை'
என்று அம்மா என் தந்தையை எனக்கு காட்ட
பின்னால் உணர்ந்தேன் என்ன தவம் செய்தேனோ
இப்படியோர் தந்தை எனக்கு கிடைத்திட என்று
என்னுள் தன்னைக்காண நினைத்த இவர்
ஒருபோதும் தானாய் நான் இருக்கவேண்டும்
என்ற ஓர் கண்டிப்பில் என்னை வளர்க்கவில்லை
நான் நானாகவே வளரத்தான் விரும்பியவர் இவர்
வைத்தியர் என் தந்தை அறுவை சிகிச்சை நிபுணர்
என் நாட்டமெல்லாம் இசையில் சிறுவயது முதல்
இருக்க கண்டு என்னை என் வழியில் விட்டு விட்டு
நான் இன்று உலகம் போற்றும் இசை மேதையாய்
இருப்பதை கண்டு அணு அணுவாய் anubavithaar
மகிழ்ந்தார் நான் ulamaara ivaraip pottrida
thaayin அன்பில் இறைவியைக்கண்ட நான்
தந்தையின் வளர்ப்பில் இறைவனைக் கண்டேனே
தந்தையே எந்தையே உனைப்போற்றி
வணங்குகின்றேன் நான் இன்று இந்த
தந்தையர் தினத்தில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Jun-19, 4:46 pm)
Tanglish : en thanthai
பார்வை : 68

மேலே