தாயாய், தந்தையாய் தனிப்பெரும் தெய்வமாய்
இலக்குமியை இதயத்தில் அமர்த்தி
இலக்குமிநாராயணன் ஆனான் திருமால்
தன்னில் உமைக்கு ஒரு பாகம் தந்து
உமாசங்கரனானான் ஈஸ்வரன்
நாவில் கலைமகளை அமர்த்திக்கொண்டான் அயனும்
இப்படி தாயாய் தந்தையாய் தனிப்பெரும்
தெய்வமாய் இவர்கள் மூன்றையும் ஒன்றில் காண
காட்சி தருகின்றார் கோயில்களில்
அர்த்தமுள்ள ஆலய வழிபாடு நலம்
தரும் வாழ்விற்கு