படிகள் ஏறி துதிக்க

சித்திரம் வரைந்தால் அன்றோ வரைதலின்
சிரமங்கள் புரியும்- செதுக்க செதுக்க பாறை
மறைந்து சிற்பமாகும் , சிற்பி அறிவான்
செதுக்களின் சிக்கல்கள் ; சித்திரம் வாங்கலாம்
விலைகொடுத்து , சிற்பமும்; ஆனால்
வாங்கியவன் அதனால் ஓவியனாகமாட்டான்
சிற்பியுமாகமாட்டான்; ஹெலிகாப்டரில்
நேராக மலைமேல் உறைவோன் கோயில் சென்றடையலாம்
முக்கிய பிரமுகராய் இறைவனை அருகில்
சென்று சேவிக்கலாம்
ஆனால் ஒருபோதும் கால் கடுக்க நா
தழு தழுக்க வியர்வைசொட்ட ஆயிரம்
படிகள் ஏறி பொது வரிசையில் நின்று
தூரத்திலேயே ஆனால் மனமெல்லாம்
அவன் தன இதயத்திலே இருப்பதாய்
நினைத்து அந்த மலைமேல் உறையும்
இறைவனை துதித்துடுவான் மட்டுமே
அறிவான் இறைவன் யார் என்று

படிகள் ஏறி நாம் வழிபடுதல் நம்
அகமமும் அதிகாரமும் கரைய
அவனில்லாது நான் இல்லை என்றெண்ணி
அவன் பாதம் சரணடையத்தான்


அர்த்தமுள்ள நம் இறை வழிபாடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (17-Jun-19, 2:03 pm)
பார்வை : 120

மேலே