பேரழகி உனைப்போல் ஒருத்தியை

பேரழகி பெற்றவளே
பெருந்தவத்தால் பிறந்தவளே
கிள்ளை மொழி பேசயிலே
உள்ளத்தில் காதல் ஊறுதடி

பிறந்தது முதல் தேடினேன்
பேரழகி உனைப்போல் ஒருத்தியை
பித்தாகி போய் பிரமித்து நின்றேன்
உன்னை நான் காண்கையிலே

கனவில் கண்ட காதல் தேவதையை விட
கண்ணெதிரில் தோன்றிய கல்பகமே
காணக் கிடைக்காத கார்கால வானவில்
கண்டு கண்டு மகிழ்வேன் காலம் பூரா காப்பேன்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (18-Jun-19, 6:45 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 222

மேலே