அவளழகு

மயில் அழகு மயில் கொண்டையினால்
கொண்டையின் நிறத்தால்
இறகால் இறகின் நீல நிறத்தால் அதில்
இயற்கை வரைந்த மயில்கண்ணால்
மயில் அழகு அது தோகை விரித்தாடும்போது
வானம் மேகம் மூடியபோது
பெண்ணே உன்னழகும் இதுபோல
செந்தாமரைபோன்ற உன் முகத்தால்
அந்த நிறத்தால் உன் மேனி மிளிர்வதால்
துள்ளும் மீனாய் அமைந்த உன் கண்களால்
மின்னலாய் வந்து போகும் உன் புன்னகையால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jun-19, 2:17 pm)
பார்வை : 568

மேலே