நறுந்தொகை 16

நிலைமண்டில ஆசிரியப்பா

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே. 16

- அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

சுவை பொருந்திய பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும் ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது.

உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமை யுடையவராகார் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது.

தேம்பழம் எனக் கூட்டுக. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது.

தொல்காப்பிய இலக்கணப்படி பனை முதலிய புறவயிரம் உள்ளவற்றிற்குப் புல் என்று பெயர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-19, 11:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே