செல்வமகள்

பெற்றவர்களின் முதல் செல்வமகளாய் இருந்து
முழு அன்பையும் பெற்று
அவர்கள் ஆசையை மனதில் சுமந்து
அன்பு குணத்தால் பல நண்பர்களை
உறவுகளாக உருவாக்கி கொண்டு
இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு
ஐந்து ஆண்டுகள் என் நிழல் போல
என் வாழ்வில் அங்கமென இருந்தவளே...

அனைத்து நட்பில் வரும் கால இடைவெளி போல
கல்லூரி காலம் முடிந்ததும் வரும்
ஒருமாத பிரிவு தான் என்று
ஏளனமாய் நான் இருந்த போது
என்னை விட்டு நிரந்தரமாய் சென்றது எனோ ?
மனபலம் இருந்த அளவு
உன் உடல் பலம் இல்லாததால் தானோ....

மனம் சொல்வதையே கேட்கும் என் ஆருயிரே...
கடந்த நான்கு ஆண்டுகளாய்...
நீ என்னை விட்டு சென்று கற்று கொடுத்த
தனிமை என்னும் பாடம்
இன்றும் என் நெஞ்சோடு இருந்து
என்னை தேற்றுகிறது...
என்னோடு நீ இருந்து கொடுத்த அன்பையும் ஆறுதலையும் போல....
ஆனாலும் உன் வெற்றிடத்தை நிரப்ப
இங்கு வேறொருவரும் இல்லையடி...

எழுதியவர் : நட்பு (28-Jun-19, 9:02 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
பார்வை : 101

மேலே