எனக்காக ஒரு பாடல் நீ எழுத வேண்டும்
எனக்காக ஒரு பாடல்
நீ எழுத வேண்டும்
என் உதடுகளில் அது தழுவும் போது
தென்றலாய் வீச வேண்டும்
என் உள்ளத்தில் ஒவ்வொரு தேன்துளியாய்
அது சொட்ட வேண்டும்
நான் வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது
நிலவொளியாய் அது பொழிய வேண்டும்
பியானோ இசையில் என் விரல்கள் தடவும் போது
அதில் நிஜமாய் நீ என் முன் நிற்க வேண்டும்
எனக்காக ஒரு பாடல் என் இனியவனே
காதல் வரிகளில் நீ எழுத வேண்டும் !