தூவானம்

\\ தூவானம் //////////////////
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
கடலென்ற விளைநிலந்தில்
கதிரவ ஒளி நீர் பாய்ச்சி
ஆவியதை பயிரிட்டு
மேகங்களாய் அறுத்தெடுத்து

உரலிட்டு இடி இடித்து
உமி எல்லாம் புடைத்துவிட்டு
புவி என்ற நெற்குதிரில்
போட்டு வைத்தாய் மழைநீரை

விருப்பப்பட்ட உணவாக
வேண்டிய அளவு எடுத்தெடுத்து
மனித இனம் எப்போதும்
மகிழ்ச்சியாய் உண்பானே

இன்று...

கடல் நீரும் உயர்ந்திருக்க
கதிரவ ஒளியும் சுட்டெரிக்க
மழைநீரை விளைவிக்க
மனமின்றி நீயிருக்க

கலிகால மனித இனம்
கதிகலங்கி இப்புவியில்
எலி வளையாய் துளையிட்டும்
எங்கும் இங்கே நீர் கானோம்

விவசாயம் விரும்பாமல்
விவசாயி அழிவதுபோல் --நீயும்
மானங்கெட்ட தொழிலென்று
மனிதன் போலே நினைத்தாயோ ?

க.செல்வராசு.....

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

எழுதியவர் : க.செல்வராசு (6-Jul-19, 7:51 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 212

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே