சந்தக் கலிவிருத்தம்

தனதானன தனதானன தனதானன தனனா .... என்ற சந்தக்குழிப்பில் அமைந்த சந்தக்கலி விருத்தம் ...!!! .

அழகாயொரு கவிபாடிட அலைபாயுது நெஞ்சம்
எழிலோவிய மவளூடிடு மிடமானது மஞ்சம்
இழையோடிடு நனிகாதலி லினிமேலிலை துன்பம்
மழையாயவ ளெனுளேவிழ வரமாகிடு மின்பம் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jul-19, 3:36 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 32

மேலே