தமிழ் நெஞ்சத்தில் பொழியும் வான்முகிலே

தென்றலுக்கு அலுக்கவில்லை
தேன்மலர்களில் மூழ்கி மூழ்கி திளைக்கிறது
தீந்தமிழுக்கு அலுக்கவில்லை
என் நெஞ்ச மலர்த்தேன் அருந்தி முடியவில்லை
கற்பனைகளுக்கு அலுக்கவில்லை
என் மனக்கரையில் மணிக்கணக்காய் காத்துக்கிடக்கிறது
கார்முகிலுக்கு தமிழகத்தில் பஞ்சம்
என் நெஞ்சத்தில் பொழிய அதற்கு வஞ்சமில்லை !
தமிழ் நெஞ்சத்தில் பொழியும் வான்முகிலே
தயை செய்து தமிழகத்திலும் பொழி !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jul-19, 9:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 198

மேலே