காதல்ச்சூடி
........காதல்ச்சூடி........
அந்திசாயும் நேரத்துல
ஆத்தங்கரை ஓரத்துல
இரக்கமில்லா என்
ஈர நெஞ்சை துளைத்தாயடி!!!!
உண்டியல் சிணுங்கும் சிரிப்பழகே!!
ஊறுகாயின் உதட்டழகே!!
எட்டநின்று எட்டிப் பார்க்க
ஏற்றுக்காமல் போனதென்ன???
ஐயம்விட்டு வாடி புள்ள
ஒன்னாபோவோம் ஊருக்குள்ள
ஓங்கி வளர்ந்த காட்டு வழியா
ஔகம் ஒன்னு பாட்டுக்குள்ள
அஃது மறப்போம் சாமத்துல..!!!!
... ரூபன் புவியன்.......