மூங்கில் காடுகளே

மூங்கில் காடுகளே
மயக்கும் மேகங்களே
சுதந்திரமாக திரியும்
மிருகங்களே
இந்த கதையை
கொஞ்சம் கேளுங்களே


ஒத்தையடி பாதையிலே
வெரசா போகையிலே
காதல் வாசம் வீசுகெயில்
பாவி மனசு களைந்ததடி

தண்டவாளம் இரண்டிருக்க
அதில் ஒத்த இரயில் போகவர
செங்கமலம் பூவை வைத்து
என்னவளே எங்கே போர

கண்டிக்க தந்தை உண்டு
காதலிக்க மனைவி உண்டு
தொட்டிலில் லே குழந்தை உண்டு
உறங்க தாய் மடியும் உண்டு

பாதை மாறி போறவளே
பாசம் மட்டும் கொண்டேனடி
பாவி மகன் நான் இருக்க
பாய் விரிக்க சென்றாய்யடி

குட்டையில் இருக்கும்
மீனை போல
உன்னை சுற்றி வந்தேனடி
கட்டையை அடுக்கி
இன்று நீ என்னை
படுக்க வைத்தாள் லடி

சொர்க்கம் என்றும் நீயும்
என்னை அணைத்து சொன்னாயே
நரகமான வாழ்கையை எனக்கு
இன்று நீ தாந்தாயே

நூல் அறுந்த காத்தாடிபோல
என்னிடம் வந்து சேர்ந்து ஆய்
பல் புடுங்கிய பாம்பை போல
என்னையும் ஆக்கி வைத்தாய்

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 12:29 am)
சேர்த்தது : Ganesan Nainar
பார்வை : 330

மேலே