மனைவி

அழகை ரசிக்க விரும்பிய
தருணங்களைவிட ரசனையை
தவறவிட்ட சமயங்களே அதிகம்
பேசாத வார்த்தைகளை விட
பேசிய மௌனங்கள் அதிகம்தான்
நினைத்து மறந்த கவிதைகளை விட
எழுதிய கவிதைகள் எண்ணிக்கையில்
பத்து பதினைந்து அதிகம்தான்
உரிமையோடு சண்டையிட்டு
அதற்காக வருந்திய நிமிடங்கள்
உண்மையில் சொல்லப்போனால்
காதலின் உரைகல் தான்
அமைதியாய் அசைபோட்ட
அவள் அழகை விட
ஆராய வேண்டிய அதிசயங்கள்
அவளிடம் இன்னும் ஏராளம்தான்
கார்காலத்தின் அடியொற்றி
நடைபோடுபவளிடம் எனக்கான
மழை மேகங்கள் அதிகம்தான்
இன்னும் ஒன்றிரண்டு வரிகள்
வசனங்கள் கூடலாம் குறையலாம்
மற்றபடி இந்த காதல் எல்லாம்
திருமணத்திற்குப்பின் அடித்த
பெரும் புயலின் பாதிப்புதான்.................!!