எங்கே நீ போனியே
ஆடி மாசம் காற்று கூட
ஆளை தூக்கி செல்லுதே
அழகான உன் விழிகள் கூட
ஆளை மயக்கி போகுதே
வேண்டாம் என்று நானிருக்க
வேண்டும் என்று வந்தியே
வேண்டும் என்று நான் இறங்க
வேடிக்கை பார்க்க விட்டியே
ரோட்டில் கூட செருப்பு இல்லாமல்
நானும் நடந்ததில்லயே
காட்டின் என்னை தனியா விட்டு
நீயும் எங்க போனியே
நானும் எந்தன் காதல் சொல்ல
தயங்கி தயங்கி வந்தேனே
நீயும் உந்தன் காதல் சொல்லி
தவிக்க விட்டு சென்றாயே
பறவை கூட சிறகு முளைத்து
தானே பறக்க முயலுதே
பாவிமக உன் நினைவு கூட
மறக்க இங்கே மறுக்குதே
குற்றம் கூட நீயும் செஞ்சே
தொட்டில் போடும் வயசிலே
பட்டினியாக நானும் வாழ்ந்தேன்
கட்டில் போடும் வயசிலே
படகும் இங்கே நகருமடி
பருவக்காறறு வருகையிலே
உன் பாவிமனம் இறங்களியே
பாசம் கொண்ட இதயத்திலே
உலகம் போற்றும் வாலிபன் போல
நானும் வாழ்ந்து வந்தேனே
ஊசி மணி விற்பவன் கூட
என்னை யேசி போறானே
பத்து பேரு கால்ல விழுந்து
என்னை படிக்க வெச்சாலே
பத்து நிமிஷம் மடியில் போட்டு
தாயை மறக்க செஞ்சாலே
மாற்றம் ஒன்றே மாறா இவ்வுலகில்
உன் நினைவுகளின் மறக்க
மாற்றத்தை தேடி அலைவது
என் குற்றமே