மழையில் நனைந்து

வான்மழை வராது போனாலும்
வைய வாழ்வில் வருவதுண்டு,
கோன்முதல் குடிசையில் வாழ்ந்திருக்கும்
காசினி மாந்தர் வாழ்வினிலே
தோன்றி வளந்தரும் பாசமழை
தொடர்ந்து வந்திடும் நின்றிடாதே,
ஊன்றிடும் உறவிது தழைத்தோங்கும்
உடன்பிறந் தோர்தம் பாசமதே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Jul-19, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 111

மேலே