நானும் ஒருவனடி

தட்டான்பூச்சி போல் /
கிட்ட வந்து காதல் நெஞ்சை
தட்டி விட்ட சுந்தரியே/

கொட்டாம் பட்டி
பாதையிலே/
நீ கொட்டைப்
பாக்கு விற்கையிலே/

நோட்டம் போட்ட
காளையர்களில் /
நாட்டாம மகன்
நானும் ஒருவனடி/

போட்டாக
வேணும் உமக்கு/
தட்டான் செய்த
பொன் தாலியடி /

காட்டாறு கடந்து வந்தேன் /
வீட்டாரைக் கேட்டு வந்தேன்/
தோட்டம் துறவும் வேண்டாமடி /
சேட்டுக் கடையும் ஏற வேண்டாமடி /

பட்டு மெத்தை
விரிப்பும் வேண்டாமடி /
கட்டழகு மேனியது போதுமடி /
தொட்டணைக்க வேண்டுமடி/

கண்டாங்கி கட்டிக்கோடி /
குண்டுமல்லி சூடிக்கோடி /
வண்டுக் கண்ணுக்கு
மை போட்டுக்கோடி/

தட்டுவேன் வாசல்க் கதவை /
வெட்கத்தை விட்டெறிந்து விட்டு /
ஓடி வந்து என்னோடு ஒட்டிக்கோடி/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (24-Jul-19, 7:14 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 203

மேலே