பசித்தவன் தேடல்
மதம் வேண்டுமென படைத்தவன் எண்ணியிருப்பின்
மனிதர்களை மதத்திற்கு ஏற்ப படைத்திருப்பான்
மதியிலும் மாற்றங்களை புகுத்தியிருப்பான்
மாதாமாதம் சுழற்சியோடு மாற வழி வகுத்திருப்பான்
எதற்காக இதைப் புகுத்த பிறந்தவன் நினைத்தானோ?
எல்லா செயலுக்கும் இதை எல்லையாக்கினானோ ?
ஏற்க முடியா வகையில் ஏராள சடங்கை வைத்தானோ?
எக்காலமும் அதை உயர்த்திப் பிடித்து வந்தானோ?
சூழலைச் சார்ந்தே குடும்பத்தில் சுற்றம் அமையும்
சுற்றியுள்ள நிலத்தைச் சார்ந்தே உணவு கிடைக்கும்
சுயமாய் எப்படி மத நம்பிக்கை வந்திருக்கும்?- அதை
சோதித்தால் தானே உண்மை சூத்திரம் தெரியும்
பசித்தவன் தேடல் உணவைக் கண்டிருக்கும்
வலித்தவனின் தேடல் மருந்தைக் கண்டிருக்கும்
பாசத்தால் தானே குடும்பம் வந்திருக்கும்
எதனாலேயே மதம் என்றென்று தோன்றிருக்கும்?
---- நன்னாடன்.